எனக்குக் கிடைக்கும் சில பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவதுதான் என் வேலை - எம் எஸ் தோனி!
ரன்களை பெரும்பாலும் ஓடி எடுக்காமல் சில சிக்சர்களை அடிப்பதே தனது பணி. ரன்களை ஓடி எடுக்காமல் பவுண்டரிகள் மூலம் திரட்டவே, தான் திட்டமிட்டு பயிற்சி செய்து வருகிறேன் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் தொடரில் நேற்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது.
Trending
இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பந்து நன்றாக திரும்பியது. எங்களது சுழற் பந்துவீச்சாளர்கள் பந்தின் சீமை பயன்படுத்தி நன்றாக பந்தை திருப்புவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். மேலும் வேகம் குறையும் என்று நினைத்தோம். இந்த ஆடுகளத்தில் சரியான ஸ்கோர் என்னவென்று தெரியவில்லை. எனவே எங்கள் பந்துவீச்சாளர்கள் நல்ல பந்துகளை வீச வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு பந்துவீச்சிலும் விக்கட்டை தேடக்கூடாது. அப்பொழுதுதான் நீங்கள் நல்ல பந்துகளை வீச ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
166 முதல் 170 ரன்கள் நல்ல ரன்னாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். நல்ல விஷயம் ஜடேஜாவுக்கும் மொயின் அலிக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. போட்டியின் கடைசிக் கட்டத்தை நெருங்க நெருங்க ஒவ்வொருவரும் தங்கள் பெல்டினின் கீழ் சில டெலிவரிகளை வைத்திருப்பது முக்கியம். எங்கள் பேட்டிங்கில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
நான் மிச்சல் சான்ட்னரை இந்த ஆட்டத்தில் விளையாட வைத்திருக்க இருக்க முடியும். அவர் பிளாட் விக்கெட்களில் பந்தை சீமில் பிடித்து நல்ல வேகத்தில் வீசக்கூடியவர். ருதுராஜ் நன்றாகவே பேட் செய்கிறார். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடும் திறன் அவருக்கு அபாரமாக உள்ளது. இதுமாதிரியான வீரர்களை கண்டறிவது கடினம்.
எனக்குக் கிடைக்கும் சில பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவதுதான் என் வேலை, எங்கள் திட்டம். இதற்கேற்ப மற்ற வீரர்களும் நல்ல வகையில் பங்களிக்கிறார்கள். இந்தத் திட்டம் இதுவரை நல்ல பலனையே அளித்துவருகிறது. அணிக்கு தேவையான பங்களிப்பைத் தருவதில் மகிழ்ச்சியே” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now