நண்பருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தோனி செய்த செயல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது பேட்டில் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ ஸ்டிக்கரை ஒட்டி தனது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அவரது கடையை தற்போது உலக முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக வீரர்கள் தற்போதிலிருந்தே பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த எம் எஸ் தோனி, இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தியது மட்டுமின்றி சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
Trending
மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 14 முறை வழிநடத்தியுள்ள தோனி 5 முறை கோப்பையை வென்று கொடுத்து, அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார். தற்போது 42 வயதை எட்டியுள்ள எம்எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக 6ஆவது முறையாக கோப்பையை வென்று கொடுத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இதுதான் தோனி விளையாடக்கூடிய கடைசி ஐபிஎல் தொடராக இருக்க கூடும் என்ற தகவல்களும் வெளியாகியிருப்பதால், ரசிகர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தோனி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக அவர் பயன்படுத்திய பேட்டில் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
MS Dhoni expresses his support and gratitude towards his friend's shop!#Cricket #IndianCricket #IPL2024 #MSDhoni #CSK pic.twitter.com/4dMVt0mtjE
— CRICKETNMORE (@cricketnmore) February 8, 2024
ஏனெனில் இது தோனியின் நெருங்கிய நண்பரான பரம்ஜித் சிங்கின் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ கடைசியின் ஸ்டிக்கர். ஏனெனில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் ஸ்பான்ஷர் கிடைக்கமால் தவித்த தோனிக்கு, தனது முயற்சியின் மூலம் பரம்ஜித் சிங் ஸ்பான்ஷரைத் தேடிக்கொடுத்தார். இது ‘எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தோனியின் சுயசரிதை படத்தில் கூட ஒரு காட்சியாக அமைந்திருக்கும்.
இந்நிலையில் தோனி தனது பேட்டில் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ ஸ்டிக்கரை ஒட்டி பரம்ஜித் சிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அவரது கடையை தற்போது உலக முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் இதே ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டினை பயன்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தோனி தனது கடினமான ஆரம்ப காலங்களில் கைகொடுத்து உதவியவர்களின் நன்றியை மறக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now