தோனியிடம் ஆடோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மைதானத்துக்குள் ஓடிவந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி விளையாடிய லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த சீசனோடு தோனி ஓய்வுபெறும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு சென்னையில் சிஎஸ்கே விளையாடிய கடைசி லீக் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று குவிந்தனர்.
நேற்றைய ஆட்டம் நிறைவடைந்த பிறகு, ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேப்டன் தோனி உள்ளிட்ட சென்னை அணி ரசிகர்கள் மைதானத்தை சுற்றி வலம்வந்து ரசிகர்களுக்கு பந்து, கையுறை உள்ளிட்டவை பரிசாக வழங்கினார். அப்போது, மைதானத்துக்குள் ஓடிவந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் வர்ணையாளருமான சுனில் கவாஸ்கர், தனது சட்டையில் கையெழுத்திடுமாறு தோனியிடம் கேட்டுக் கொண்டார்.
Trending
இதையடுத்து, சட்டையில் கையெழுத்திட்ட தோனி, அவரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தோனியிடம் கையெழுத்து வாங்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
MS Dhoni & CSK thanking the Chepauk crowd.
— Johns. (@CricCrazyJohns) May 14, 2023
What a lovely video. pic.twitter.com/qEkTcg9P3s
இதையடுத்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், "எம்எஸ் தோனியை போன்ற வீரர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தான் வருவார்கள்" என்று பாராட்டியுள்ளார். வாழ்நாளில் எத்தனையோ சாதனைகள், எத்தனை வீரர்களை பார்த்துள்ள சுனில் கவாஸ்கர், தோனியை புகழ்ந்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ள சம்பவம் ஐபிஎல் தொடரின் மிகமுக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now