
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஷிவம் தூபே தனது விக்கெட்டை இழந்தார். இதனால் அடுத்து ரவீந்திர ஜடேஜா தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகேந்திர சிங் தோனி களமிறங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
Jadeja teased the crowd by walking ahead of Dhoni as a joke. This team man pic.twitter.com/Kiostqzgma
— (@SergioCSKK) April 8, 2024