
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசியின் அனைத்து வகையிலான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டனும் இவர் தான். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின், இந்திய அணியிலிருந்து விலகியிருந்த தோனி, கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஸ்டைலில் எளிமையாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைகொடுத்தார்.
அதன்பின் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடி வருகிறார். ஆனால் அவரை இந்திய அணி ஜெர்சியில் காணமுடியாத ஏக்கம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இன்றளவும் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது அவர்களின் ஏக்கம் முடிவுக்கு வந்தது என்று தான் கூற வேண்டும். ஆம், ஏனெனில் இந்திய அணி புதிதாக அறிமுகப்படுத்திய ரெட்ரோ ஜெர்சியில் தோனி இருக்கும் புகைப்படம் தான் அதற்கு காரணம். ஆனால் அவர் விளம்பர படத்திற்காக மாட்டும் அந்த ஜெர்சியை அணிந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.