ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஏப்ரல் மாதத்திற்கான விருதை வென்றனர் முகமது வசீம், ஹீலி மேத்யூஸ்!
ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை யுஏஇ-ன் முகமது வசீமும், சிறந்த வீராங்கனை விருதை வெண்டீஸின் ஹீலி மேத்யூஸும் வென்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி, ஐக்கிய அரபு அமீரக அணியின் முகமது வசீம் மற்றும் நமீபியா அணியின் எராஸ்மஸ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரராக ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வசீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏசிசி பிரீமியர் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
Trending
அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியலில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீல் மேத்யூஸ் மற்றும் இலங்கை அணியின் கேப்டனான சமாரி அத்தப்பது ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலி மேத்யூஸ் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீலி மேத்யூஸ் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியதுடன் தொடர் நாயகி விருதையும் வென்று அசத்தினார். இதன்மூலம் அவர் ஐசிசியின் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now