பிஎஸ்எல் 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.
Trending
இதில் அதிகபட்சமாக ரிலே ரொஸ்ஸோவ் 65 ரன்களையும், முகமது ரிஸ்வான் 53 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திய லாகூர் கலந்த்ர்ஸ் அணியில் ஃபகர் ஸமான் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார்.
ஆனால் அவரைத் தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஃபகர் ஸமானும் 63 ரன்களோடு வெளியேறினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் ஷான்நவாஸ் தானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூல முல்தான் சுல்தான்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now