
Multan Sultans vs Lahore Qalandars, PSL 8 1st Match – MUL vs LAH Cricket Match Preview, Prediction, (Image Source: Google)
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச்சென்றது. இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முல்தான் சுல்தான்ஸ் இப்போட்டியில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ்
- இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
- நேரம் - இரவு 8 மணி