Advertisement
Advertisement
Advertisement

முல்தான் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 15, 2023 • 13:21 PM
Multan Sultans vs Quetta Gladiators, 3rd Match PSL 8 – MUL vs QUE Cricket Match Preview, Prediction,
Multan Sultans vs Quetta Gladiators, 3rd Match PSL 8 – MUL vs QUE Cricket Match Preview, Prediction, (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இத்தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், போட்டியின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி, சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ்
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் போட்டியில் கடைசி வரை போராடியும் ஒரு ரன் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரிஸ்வான், ஷான் மசூத், டேவிட் மில்லர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் பந்துவீச்சில் உஸாமா மிர், இஷனுல்லா ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், ரன்களை வாரி வழங்கியது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடன் ஷாநவாஸ் தஹானி, அகில் ஹொசைன், சமீன் குல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மறுபக்கம் சர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தொடரை வெற்றியுடன் தொடங்க ஆயத்தம் காட்டி வருகிறது. இதில் மார்ட்டின் கப்தில், ஜேசன் ராய், உமர் அக்மல், இஃப்திகார் அஹ்மத் ஆகியோர் இருப்பது அணியின் பேட்டிங் வலிமையை கூட்டியுள்ளது.

பந்துவீச்சில் நசீம் ஷா, முகமது ஹொஸ்னைன், உமைத் ஆசிஃப், வநிந்து ஹசரங்கா ஆகியோருடன் முகமது நவாஸும் அணியில் இருப்பது அணியில் கூடுதல் பலத்தை தந்துள்ளது.

உத்தேச லெவன்

முல்தான் சுல்தான்ஸ் – ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கே), உஸ்மான் கான், கீரன் பொல்லார்ட், டேவிட் மில்லர், குஷ்தில் ஷா, அகேல் ஹொசைன், உசாமா மிர், சமீன் குல், ஷாநவாஸ் தஹானி, இஹ்சானுல்லா.

குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஜேசன் ராய், மார்ட்டின் கப்தில், அப்துல் வாஹித் பங்கல்சாய், உமர் அக்மல், சர்ஃபராஸ் அகமது (கே), இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், வனிந்து ஹசரங்கா, உமைத் ஆசிஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - சர்ஃப்ராஸ் அகமது, முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ் - டேவிட் மில்லர், ஜேசன் ராய், ஷான் மசூத், இஃப்திகார் அகமது
  • ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்கா, குஷ்தில் ஷா
  • பந்துவீச்சாளர்கள் - உசாமா மிர், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - முகமது ரிஸ்வான், இஃப்திகார் அஹமத், வனிந்து ஹசரங்க
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement