Advertisement
Advertisement
Advertisement

WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 08, 2024 • 22:17 PM
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியையும் மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணி  - மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • மும்பை இந்தியன்ஸ் - 03
  • குஜராத் ஜெயண்ட்ஸ் - 00

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ், அமெலியா கெர், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (கே), பூஜா வஸ்த்ரகர், அமன்ஜோத் கவுர், எஸ் சஜனா, ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

குஜராத்ஜெயண்ட்ஸ்: லாரா வோல்வார்ட், பெத் மூனி (கே), ஆஷ்லே கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், வேதா கிருஷ்ணமூர்த்தி, தயாளன் ஹேமலதா, கேத்ரின் பிரைஸ், தனுஜா கன்வர், மன்னத் காஷ்யப், மேக்னா சிங், ஷப்னம் ஷகில்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: யாஷ்திகா பாட்டியா, பெத் மூனி
  • பேட்டர்ஸ்: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், லாரா வோல்வார்ட், ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (துணை கேப்டன்), அமெலியா கெர், ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஷப்னிம் இஸ்மாயில், தனுஜா கன்வர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement