Advertisement

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்ம சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 29, 2025 • 02:15 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 29, 2025 • 02:15 PM

இத்தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்ம சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

ஐபிஎல்லில் 7000 ரன்கள்

அதன்படி இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 43 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 7000 ரன்களைப் பூர்த்தி செய்வார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் 7ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரையில் விராட் கோலி 257 இன்னிங்ஸ்களில் 8606 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம், ரோஹித் இதுவரை 265 இன்னிங்ஸ்களில் 6957 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல்லில் 300 சிக்ஸர்கள்

குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மேலும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால், ஐபிஎல் தொடரில் தனது 300 சிக்ஸர்களை பூர்த்தி செய்வதுடன், இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் 358 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில், ரோஹித் சர்மா 298 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியாலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்கள்

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து ரோஹித் சர்மா மேலும் 7 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்களை பூர்த்தி செய்வார். இதன்மூலம் இந்திய அணி தரப்பில் இந்த சாதனையை படைக்கும் முதல் வீரர் மற்றும் உலகளவில் 7ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதுவரை கிறிஸ் கெய்ல், கீரோன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல், நிக்கோலஸ் பூரன், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement