
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோஹித் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களை குவித்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரைத் தவிற மற்ற யாரும் சரிவர விளையாடாத காரணத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 205 ரன்கலை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்ளது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த வெற்றிக்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். எங்கள் மனதில் இருந்து தோல்விகளை மறந்து, இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொண்டோம். நாங்கள் திட்டங்களுக்கு ஏற்ப ஆர்டரை மாற்றினாலும், எங்களது பிளேயிங் 12 இதுவாகவே இருக்கும்.