Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Advertisement
Mumbai Indians Fined After 5th Consecutive Defeat In IPL 2022
Mumbai Indians Fined After 5th Consecutive Defeat In IPL 2022 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 14, 2022 • 01:52 PM

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சோகமானதாக அமைந்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 14, 2022 • 01:52 PM

தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்விகளை சந்தித்திருந்த அந்த அணி நேற்று பஞ்சாப் அணியிடமாவது முதல் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

Trending

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வால், ஷிகர் தவானின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய மும்பை அணி எதிர்பாராத விதமாக விக்கெட்களை பறிகொடுக்க 20 ஓவர்களில் 186 /9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5ஆவது தோல்வியை பெற்றது.

இந்நிலையில் மும்பை அணிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது நேற்றைய போட்டியில் மும்பை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இது நிரூபிக்கப்பட்டதால் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த தொடரில் மும்பை அணியின் 2ஆவது தவறு இதுவாகும். முதல் போட்டியிலேயே டெல்லிக்கு எதிராக இந்த தவறை செய்தது. இதற்காக ரோகித் சர்மாவுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் 2வது முறையாக தவறு செய்ததால் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிமுறைப்படி 3ஆவது முறையாக, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டனர் என புகார் எழுந்தால் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும். மேலும் அவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் மற்றும் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement