
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொஅட்ரில் இரு அணிகளும் தோல்வியைச் சந்தித்த பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் வகையில் அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் விளையாடவுள்ளார். முன்னதாக ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அவரால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினார்.