
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளைப் பூர்த்தி செய்து அசதியாதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது.
அந்தவகையில் இத்தொடரில் மும்பை அணி விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதிலும் மும்பை அணி வெற்றிபெறும் நிலையில் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த விக்னோஷ் புதூர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வீரர்கள் ஏலத்தில் கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் புதுரை மும்பை இந்தியன்ஸ் அணி அவரின் அடிப்படை தொகையான ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.