
Murali Vijay Not Considered For Mushtaq Ali Trophy After Refusal to Take Vaccine: Report (Image Source: Google)
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் தமிழக அணியில் நட்சத்திர வீரர் முரளி விஜய் இடம்பெறாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒருவாரம் கரோனா தடுப்பு வளையத்தில் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பிசிசிஐ வகுத்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா தடுப்பு வளையத்தில் இருக்கவும் விருப்பம் இல்லாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய்யால் பங்கேற்க முடியவில்லை என்கிற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனினும் முரள் விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.