12 சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்த முரளி விஜய்!
டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கு எதிராக முரளி விஜய் சதம் விளாசி அசத்தியிருக்கிறார்.

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் அனைத்து தரப்பு போட்டிகளிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இதேபோன்று தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்று கொடுத்து வந்தார்.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய முரளி விஜய், பல்வேறு தொடர்களில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து தந்தார் . இந்த நிலையில் தமிழக வீரர் முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட் அணையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் பிறகு ஐபிஎல் போட்டியிலும் முரளி விஜய் சரிவர விளையாட வில்லை .
Trending
2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடிய முரளி விஜய் சரிவர விளையாடததால் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இருந்தார். இதனை அடுத்து கிரிக்கெட் இருந்து சற்று விலகி இருந்த முரளி விஜய் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு வந்துள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய கிரிக்கெட்டில் கலக்கிய வருகிறார்.
ஐபிஎல் மூலம் தினேஷ் கார்த்திக் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.இதே பாணியை தற்போது முரளி விஜய்யும் கடைப்பிடித்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் முரளி விஜய் இடம்பெற வேண்டும் என்றால் டிஎன்பிஎல் தொடரில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இதனை நன்கு புரிந்து கொண்ட முரளி விஜய் நேற்று நடைபெற்ற நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது பழைய அதிரடியை காட்டினார்.
சிஎஸ்கேவுக்காக எப்படி தொடக்க வீரராக கலக்கினாரோ அதேபோன்ற ஒரு ஆட்டத்தை முரளி விஜய் காட்டினார். 66 பந்துகளை எதிர் கொண்ட முரளி விஜய் 121 ரன்கள் விலாசினார் இதில் ஏழு பௌண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் முரளி விஜய் மீது அனைவரின் கவனமும் பெற்றுள்ளது.
மேலும் இந்த இன்னிங்ஸில் அவர் 12 சிக்சர்களை விளாசியதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now