
Mushfiqur Rahim Unavailable For West Indies Tour Due To Hajj (Image Source: Google)
வங்கதேச அணி தற்போது இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிக்கூர் ரஹீம், ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது.
அதன்படி ஜூன் 22ஆம் தேதி சௌதி அரேபியாவுக்கு முஷ்பிக்கூர் ரஹிம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.