Advertisement

ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வதே எனது நோக்கம் - சாய் சுதர்சன்!

சரியாக என்ன செய்ய வேண்டும் என்று நான் யோசித்தேன். ஆனால் நான் அழுத்தத்தின் கீழ் இருக்கவில்லை என ஆட்டநாயகன் விருதுபெற்ற சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 05, 2023 • 11:57 AM
My aim is to take the game to the end - Sai Sudarsan!
My aim is to take the game to the end - Sai Sudarsan! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 16ஆவது சீசனிங் ஏழாவது போட்டி இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா வழக்கம்போல் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணிக்கு கேப்டன் வார்னர் மற்றும் பிரிதிவி ஷா தொடக்க விரர்களாக வந்தார்கள்.

ஷார்ட் பந்தில் பலவீனம் உள்ள பிரிதிவி ஷா அப்படியான முகமது சமியின் பந்தில் வெளியேறினார். இதற்கு அடுத்து அந்த அணிக்கு 30 ரன்களை தொட்டது கேப்டன் வார்னர், சர்பராஸ் கான் மற்றும் அச்சர் படேல் மூவரும்தான். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 162 ரன்கள் 8 விக்கெட் இழந்து எடுத்தது. ரஷீத் கான் 31 ரன்கள் தந்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

Trending


இதற்கு அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களை அன்றிச் நோர்கியா கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஐந்து ரண்களில் வெளியேறினார்.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் பொறுப்பாக விளையாடி அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார்கள். இந்த ஜோடி 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் போயிருக்க விஜய் சங்கர் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மில்லர் அதிரடியாக 31 ரன்கள் சேர்க்க, இறுதிவரை களத்தில் நின்ற தமிழக வீரர் சாய் கிஷோர் 48 பந்துகளில் நான்கு பவுண்டரி 2 சிக்சர்கள் உடன் 64 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய சாய் சுதர்சன், “என்னை பேக் செய்ததற்கு நன்றி. இது என்னுடைய முதல் விருது என்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. சரியாக என்ன செய்ய வேண்டும் என்று நான் யோசித்தேன். ஆனால் நான் அழுத்தத்தின் கீழ் இருக்கவில்லை. இங்கு விக்கெட் சற்று பந்து தாழ்வாகவும், ஸ்கிட்டாகியும் வரும்படி இருந்தது. 

ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வதே எனது நோக்கம். ஆரம்பத்தில் பந்து வேகமாக இருந்தது. இதனால் நான் கொஞ்சம் பந்தை வர விட்டு தாமதமாக விளையாட முடிவு செய்தேன். இதுதான் எனது ஆட்டத்தின் ஹைலைட் ஆகவும் இருந்தது” என்று கூறினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement