Advertisement
Advertisement
Advertisement

எனது உழைப்பிற்கான பரிசு கிடைத்துள்ளது - ரொமாரியோ ஷெஃபெர்ட்!

நான் எப்போதும் ஒருதலைப்பட்சமாக விளையாட விரும்பாததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் 50 – 50 என்ற நிலையில் எனது திறனை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ரொமாரியோ ஷெஃபெர்ட் தெரிவித்துள்ளார்.

Advertisement
எனது உழைப்பிற்கான பரிசு கிடைத்துள்ளது - ரொமாரியோ ஷெஃபெர்ட்!
எனது உழைப்பிற்கான பரிசு கிடைத்துள்ளது - ரொமாரியோ ஷெஃபெர்ட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 07, 2024 • 10:47 PM

 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 07, 2024 • 10:47 PM

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 49 ரன்களையும், டிம் டேவிட் 45 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபெர்ட் 39 ரன்களையும் சேர்த்தனர். 

Trending

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ப்ரித்வி ஷா - அபிஷேக் போரல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் பிரித்வி ஷா 66 ரன்களில் பெவிலியன் திரும்ப, அபிஷேக் போரல் 41 ரன்களில் நடையைக் கட்டினார். இதனையடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் 8 ரன்னிலும் லலித் யாதவ் 3 ரன்னிலும் குமார் குஷாக்ரா 0 ரன்னிலும் வெளியேறினர்.

இப்போட்டியில் கடைசி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி  71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆட்நாயகன் விருடஹி வென்றார். 

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய ஷெஃபெர்ட், “இப்போட்டியில் என்னுடைய கடின உழைப்பிற்கான பரிசு கிடைத்துள்ளது.  நான் வலைப்பயிற்சியில் அதிகளவு கடின உழைப்பை கொடுத்துள்ளேன். கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யும் போது நான் தெளிவான மனநிலையை கொண்டிருந்தேன். டிம் டேவிட் என்னிடம் நீங்கள் பந்தை எதிர்கொண்டு விளையாடுங்கள் என்று ஆலோசனை கூறினார். 

மேலும் நான் அதிரடியாக விளையாடுவதற்கான சரியான இடத்தில் இருந்தேன் என்று நினைக்கிறேன. நான் எப்போதும் ஒருதலைப்பட்சமாக விளையாட விரும்பாததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் 50 – 50 என்ற நிலையில் எனது திறனை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.பேட்டிங் செய்வதற்கான பலம் அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் வருகிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக சில இந்திய உணவுகளை எடுத்துகொள்வது அதில் அடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement