
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் அபீஜித் தோமர் சதமடித்து அசத்தியதுடன் 111 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் மஹிபால் லாம்ரோர் 60 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கார்த்திக் சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணியில் துஷார் ரஹேஜா மற்றும் பூபது குமார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்தி வந்த ஜெகதீசன் 65 ரன்களுக்கும், பாபா இந்திரஜித் 37 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை போராடிய விஜய் சங்கரும் 49 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.