
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை நஹித் ரானா வீசிய நிலையில், அந்த ஓவரின் 3ஆவது பந்தை எதிர்கொண்ட கேன் வில்லியம்சன் அதனை கவர் டிரைவ் அடிக்க முயற்சித்த நிலையில், பந்து அவரின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 5 ரன்களுடன் நடையைக் கட்டினர். இந்நிலையில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கேன் வில்லியம்சனின் ஃபார்ம் கவலைகுறியதாக உள்ளது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் சோபிக்க தவறிய கேன் வில்லியம்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்திருந்தார். இந்நிலையில் தற்போது வங்கதேசத்திற்கு எதிராகவும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளதுடன், நியூசிலாந்து அணி மீதான அழுத்ததையும் அதிகரித்துள்ளது.