Advertisement

BAN v IRE: நஹ்முல் ஹுசைன் சதத்தால் அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement
Najmul Hossein Stars As Bangladesh Beat Ireland By 3 Wickets In 2nd ODI
Najmul Hossein Stars As Bangladesh Beat Ireland By 3 Wickets In 2nd ODI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 13, 2023 • 12:39 PM

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 13, 2023 • 12:39 PM

இப்போட்டியிலும் மழை குறுக்கீடு இருந்ததன் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பதுவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹாரி டெக்டர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 112 பந்தில் 10 சிக்சர் உள்பட 140 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டாக்ரெல் 47 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.

Trending

இதையடுத்து, 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அதில் கேப்டன் தமிம் இக்பால் 7 ரன்களிலும், லிட்டன் தாஸ் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். அவருக்கு துணையாக விளையாடிய தவ்ஹித் ஹிர்தோய் 68 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் வங்கதேச அணி 44.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement