
வங்கதேச அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் அந்த அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வங்கதேச அணிக்கு நஜ்முல் ஹொசைன் சாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை வழிநடத்திய ஷாகிப் அல் ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் நஹ்முல் ஹொசைனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
வங்கதேச ஒருநாள் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்ஸித் ஹசன், அனமுல் ஹக், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், அஃபிஃப் ஹொசைன், சௌமியா சர்க்கார், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன், ஹசன் மஹ்மூத், ரிஷாத் ஹொசைன், ரகிபுல் ஹசன்.