ஓஜா, இர்ஃபான் காட்டடி; இறுதிக்கு முன்னேறியது இந்தியா லெஜண்ட்ஸ்!
நமன் ஓஜாவின் அதிரடி அரைசதம் மற்றும் இர்ஃபான் பதானின் காட்டடி ஃபினிஷிங்கால் ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாலை பாதுகாப்பு உலக டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் - ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணி நேற்றைய தினம் 17 ஓவர்கள் விளையாடி நிலையில் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து அப்போட்டி இன்று மீண்டும் தொடங்கியது.
Trending
அதன்படி விளையாடிய அந்த அணியில் ஷேன் வாட்சன் 30, தூலன் 35, பென் டன்க் 46, கேமரூன் ஒயிட் 30 ஆகியோர் சிறப்பாக ஆடியதால் ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் 10, சுரேஷ் ரெய்னா 11, யுவராஜ் சிங் 18, ஸ்டூவர்ட் பின்னி 2, யூசுஃப் பதான் 1 ஆகியோர் ஒருமுனையில் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, மறுமுனையில் நமன் ஓஜா மட்டும் தனித்து நின்று நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார்.
அவர் மட்டும் தனிநபராக இலக்கை நோக்கி இந்தியா லெஜண்ட்ஸை அழைத்து செல்ல, 7ஆம் வரிசையில் இறங்கிய இர்ஃபான் பதான் சிக்ஸர்களாக விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார் இர்ஃபான் பதான். நமன் ஓஜா 62 பந்துகளில் 90 ரன்களை குவித்தார்.
இதன்மூலம் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now