
Naseem Shah Outfoxes Kusal Mendis For Golden Duck With a Perfect Inswinger in Asia Cup Final (Image Source: Google)
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது.
மேலும் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணியே இந்த மைதானத்தில் பெரும்பான்மையான போட்டியில் வென்றது. இது குறித்து பேசிய கவுதம் கம்பீர், இலங்கை கேப்டன் ஷனாகா கடந்த போட்டியில் பெரிய தவறை செய்தததாக குறிப்பிட்டார். கடந்த ஆட்டத்தில், இலங்கைக்கு பேட்டிங் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், ஷனாகா அதனை வீணடித்துவிட்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். அன்றைய ஆட்டத்தில் இலங்கை முதலில் பேட் செய்து இருந்தால், எந்த நெருக்கடியும் இன்றி விளையாடி அனுபவத்தை பெற்று இருக்கலாம். அது இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர்களுக்கு கைக் கொடுத்து இருக்கும்.