
இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றாமல் இருப்பது இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று வகையான ஐசிசி கோப்பையும் வென்ற பின்னர் அடுத்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் பல்வேறு கோப்பைகளை இந்திய அணி தவற விட்டது.
அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இரண்டு முறை முன்னேறியும் அந்த இரண்டு வாய்ப்புகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அணியாக இந்திய அணி திகழ்ந்தும் கோப்பையை தவறவிட்டது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் தற்போது இந்திய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “நான் ரிக்கி பாண்டிங்குடன் ஆசஷ் தொடரின் போது நிறையவே நேரத்தை செலவிட்டேன். அப்போது நானும் இங்கு போன்றும் நிறைய பேசிக்கொண்டோம். அந்த சமயத்தில் ஒருமுறை ரிக்கி பாண்டிங் ரிஷப் பந்த்க்கு தனது மொபைல் போன் மூலம் மெசேஜ் அனுப்பி எங்கே இருக்கிறாய்? என சில விடயங்களை கேட்டறிந்தார்.