
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தினேஷ் சண்டிமால் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, குசால் மெண்டிஸ் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடரவுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இப்போட்டியில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளை கைப்பாற்றியதன் மூலம் ஆசியாவில் அவர் தனது 150 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் ஆசியாவில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசியரல்லாத பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் மறைந்த முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே 127 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.