
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 279 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இறுதியில் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது நாதன் லயனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காயம் காரணத்தினால் நாதன் லயனை இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் பாட் கம்மின்ஸ். இருப்பினும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்பிய லயன் பேட் செய்தார். 13 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பேட் செய்ததனால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. அதனால் ஆஸ்திரேலியா 370 ரன்கள் முன்னிலை பெற்றது.
இது குறித்து பேசிய நாதன் லையன், “பாட் கம்மின்ஸ் என்னிடம் இரண்டாவது இன்னிங்ஸில் நீங்கள் பேட் செய்ய வேண்டாம் என்றார். ஆனால், நான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டு மற்றும் மருத்துவக் குழுவிடம் பேசினேன். நான் பேட் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் பேசினேன். நான் அதிகமாக மருத்துவக் குழுவினருடன் நேரம் செலவிட்டேன்.