Advertisement

 ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றியைப் பெறுவோம் - நாதன் லையன்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து ரசிகர்களை வாயடைக்கச் செய்வோம் என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 17, 2023 • 20:59 PM
Nathan Lyon thinks the Aussies will whitewash England!
Nathan Lyon thinks the Aussies will whitewash England! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் வருகிற ஜூன் 16ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை விளையாடவுள்ளது. எப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறத, அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்த ஆஷஸ் தொடர், ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 4-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் தற்போது இங்கிலாந்து மண்ணில் நடக்கும் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி தன்னுடைய தோல்விக்கு பழி தீர்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending


இதனால் இந்த தொடர் குறித்தான தன்னுடைய எதிர்பார்ப்புகளை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் நாதன் லையன், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 100% வெற்றி பெறும் என செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நாதன் லையன், “நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி 100% வெற்றி பெறும், இதையே நீங்கள் உங்களுடைய செய்திகளுக்கு தலைப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பொறுத்த வரையில் நான் பேசுவது வெறும் தலைப்பாக தோன்றலாம், ஆனால் என்னுடைய பார்வையில் நான் ஒவ்வொரு போட்டியும் ஆஸ்திரேலிய நாட்டிற்காக வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என முயற்சி செய்கிறேன். 

மேலும் ஆஸ்திரேலியா அணி கடந்த இரண்டு வருடங்களில் செய்ததை நினைத்து ஒரு அணியாக நாங்கள் பெருமை அடைகிறோம், நிச்சயம் இது ஒரு மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. நிச்சயம் இந்த தொடரை காண்பதற்கு பெரும்பாலான இங்கிலாந்து ரசிகர்கள் வருவார்கள். நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு அவர்களை வாயடைக்கச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement