Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்கவுள்ள நாதன் லையன்!

தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளார் நாதன் லையன் படைக்கவுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 28, 2023 • 12:56 PM
Nathan Lyon will become the first bowler to play 100 consecutive Test matches today!
Nathan Lyon will become the first bowler to play 100 consecutive Test matches today! (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய மிக்க தொடர்களில் ஒன்றாக கருதப்படுவது ஆஷஸ் தொடர். இத்தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நடைப்பானடு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்  தொடங்கவுள்ளது. இதில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற முனைப்போடு இங்கிலாந்து அணி போராடும்.

Trending


இப்போட்டியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், அசாத்தியமாக ஸ்பின் போட்டு பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் நாதன் லையன் இன்றைய டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவர் இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 495 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றும் நிலையில், 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 8ஆவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியவர்களில் அலெஸ்டர் குக், ஆலன் பார்டர், சுனில் கவாஸ்கர், மார்க் வாக், பிரெண்டன் மெக்கல்லம் என்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்துள்ள நிலையில் முதலாவதாக ஒரு பந்துவீச்சாளராக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது நாதன் லயன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement