Advertisement

NED vs PAK, 2nd ODI: பாபர் ஆசாம், ரிஸ்வான், சல்மான் அரைசதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!

நெதர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.

Advertisement
NED vs PAK, 2nd ODI: Pakistan take an unassailable 2-0 lead and wrap up the ODI series against Nethe
NED vs PAK, 2nd ODI: Pakistan take an unassailable 2-0 lead and wrap up the ODI series against Nethe (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 18, 2022 • 09:50 PM

பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 18, 2022 • 09:50 PM

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில்  பேட்டிங் செய்தது. நெதர்லாந்து அணியில் லீட் மற்றும் கூப்பர் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை.

Trending

8 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்துவிட்ட நிலையில், 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லீட் - கூப்பர் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் செய்து இருவருமே அரைசதம் அடித்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 109 ரன்களை குவித்தனர்.

டாம் கூப்பர் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஒருமுனையில் லீட் நிலைத்து நிற்க மறுமுனையில் மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக லீக் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 44.1 ஓவரில் 186 ரன்களுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட்டானது.

இதையடுத்து 187 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக்(6) மற்றும் ஃபகர் ஜமான் (3)ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர்  ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இண சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்ததுடன், 69 ரன்களையும் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அகா சல்மானும் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதன்மூலம் 34ஆவது ஓவரிலேயே பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement