
Need to be realistic, not easy for NZ to play series three days after WC final: Dravid (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
அவரது பயிற்சியின் கீழ் முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரானது நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய அசத்தியது.
இந்நிலையில் இந்த தொடர் வெற்றி குறித்து பேசிய ராகுல் டிராவிட், “இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. வீரர்கள் அனைவரும் நன்றாகவே இந்த தொடர் முழுவதும் விளையாடினர். எல்லாம் நன்றாக இருந்தாலும் நாம் நிஜ தன்மையை உணர வேண்டும், சரியாக நடந்து கொள்ள வேண்டும்.