டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாதது குறித்து மனம் திறந்த முஸ்தபிசூர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடாமல் இருப்பது பற்றி வங்கதேசப் பந்துவீச்சாளரும் தில்லி அணியைச் சேர்ந்தவருமான முஸ்தாபிசுர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.
முஸ்தாபிசுர் ரஹ்மான் வங்கதேச அணிக்காக 2015 முதல் 14 டெஸ்டுகள், 74 ஒருநாள், 63 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக 2021 பிப்ரவரியில் விளையாடினார்.
இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், “நல்ல உடற்தகுதியுடன் இருப்பது எனக்கு முக்கியம். வங்கதேச அணிக்காக நீண்ட நாள் நான் விளையாட வேண்டும் என்றால் அதற்கு உடற்தகுதி முக்கியமானது. உடற்தகுதியைக் கடைப்பிடிப்பதற்காகவே மூன்று வகை கிரிக்கெட்டிலும் தேவையான ஆட்டங்களைத் தேர்ந்தெடுத்து விளையாடுகிறேன்.
Trending
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது தொடர்பான எனது நிலைப்பாட்டை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிய விரும்பினால் அவர்களிடம் விளக்கம் அளிப்பேன். எந்த வகை கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது பற்றி வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவரிடம் மூத்த வீரர்கள் பேசியிருக்கிறார்கள். அதேபோல நானும் பேசுவேன். அதேசமயம் அவருக்கு என் நிலைமை நன்குத் தெரியும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் கட்டாயமாக விளையாட வேண்டும் என கிரிக்கெட் வாரியம் என்னை வற்புறுத்தியதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஒப்பந்தம் என்னிடம் கிடையாது. எந்த வகை கிரிக்கெட்டில் எனக்கு அதிக வெற்றிகள் கிடைத்துள்ளதோ அதைத் தேர்வு செய்கிறேன்.
ஒருநாள், டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் எனக்கு அதிக வெற்றிகள் கிடைத்துள்ளன. எனவே இவ்விரண்டிலும் அதிகக் கவனம் செலுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now