
Need To Show More Courage In Crunch Moments, Says Dejected Kohli After CSK Loss (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “இந்த மைதானம் ஆட்டம் செல்ல செல்ல ஸ்லோ ஆனது. இந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்து விட்டோம் என்று நினைக்கிறோம். 175 ரன்கள் வரை வந்து இருந்தால் நிச்சயம் அது வெற்றிக்கான இலக்காக இருக்கும். அதே போன்று பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.
சென்னை அணி இரண்டாவது பாதியில் சிறப்பாக பந்து வீசியது. ஸ்லோ பால் மற்றும் யார்க்கர் என தொடர்ந்து எங்களை அவர்கள் ரன்கள் குவிக்கவிடாமல் தடுத்தார்கள். ஆனால் நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை.