Neeraj, Mithali, Chhetri among 12 to receive Khel Ratna on November 13 (Image Source: Google)
விளையாட்டு துறையில் உயரிய விருது கேல் ரத்னா விருது. ஆண்டுதோறும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான விருது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் வரும் 13ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான மிதாலி ராஜும் ஒருவர். மகளிர் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமது சேவையை செய்து, பல சாதனைகளை படைத்ததின் காரணமாக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.