
நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சேன். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர். லெக் ஸ்பின்னரான இவர் உலகின் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடிவருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 17 வயது சிறுமி ஒருவர் இந்தப் புகாரை நேபாளின் கவுசாலா பெருநகர காவல் துறையிடம் அளித்துள்ளார். அவர் அளித்திருக்கும் புகாரில், “நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். அதனையடுத்து அவரை சந்தித்தபோது, என்னை 2 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்” என கூறியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, அப்பெண்ணிற்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசராணையும் மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் கடந்த மாதம் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.