
Nepal spinner Sandeep Lamichhane, Shoaib Akhtar receive first dose of COVID-19 vaccine (Image Source: Google)
கரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ருத்ரதாண்டவமாடி வருகிறது.
இதையடுத்து கரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட வீரர்களும் தங்களது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
மேலும் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.