ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நேபாள வீரர்!
ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் நேபாள அணியைச் சேர்ந்த குஷால் புர்டலின் பெயர் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஓவ்வொரு மாதத்திலும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான வீரர்/ வீராங்கனைகளின் பரிந்துரை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், தொடக்க வீரர் ஃபகர் ஸ்மான் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நேபாள் அணி வீரர் குஷால் புர்டல் -ன் பெயரும் இப்பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Trending
24 வயதேயான குஷால் புர்டல் நேபாள அணிக்காக 5 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று 69 சராசரியுடன் 278 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
அதேசமயம் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருது பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி மற்றும் மேகன் ஸ்காட் ஆகியோரது பெயரும், நியூசிலாந்து அணியின் லே கேஸ்பர்க்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now