சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பராஸ் கட்கா ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் பராஸ் கட்கா ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

நேபாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பராஸ் கட்கா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 3) அந்த அணியின் கேப்டனாக முதல் ஒருநாள் போட்டியில் வழிநடத்தினார்.
அவர் தலைமையிலான நேபாள் அணி அன்றைய போட்டியில் வெற்றி பெற்று, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியிருந்தது.
இதுவரை 10 ஒருநாள், 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கட்கா, 1,114 ரன்களைத் அடித்துள்ளார். இந்நிலையில் தற்போது 35 வயதாகும் பராஸ் கட்கா இன்று (ஆகஸ்ட் 3) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தங்கள் வாழ்த்துக்களை கட்காவிற்கு தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now