
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலாவதாக விளையாடிய நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்க முன்னர் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது.
அப்படி 43 ஓவர்கள் என்கிற அடிப்படையில் களமிறங்கிய நெதர்லாந்து அணியானது முழுவதுமாக 43 ஓவர்களும் விளையாடி 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 78 ரன்களையும், வான்டர் மெர்வ் 29 ரன்களையும் குவித்து அசத்தினர்.