
நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் முத்தரப்பு டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் ஜான்சன் 4 ரன்களிலும், தில்ப்ரீத் பஜ்வா 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராயன் பதான் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயும், அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் மொவ்வா மற்றும் ஹர்ஷ் தாகர் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
இதனால் கனடா அணியானது 80 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ரவீந்திரபால் சிங் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் கிர்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் கிர்டன் 8 பவுண்டரிகளுடன் 69ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
அதேசமயம் மறுப்பக்கம்அவருக்கு துணையாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திரபால் சிங் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதனூலம் கனடா அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கைல் கெலின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் மற்றும் மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர்.