
Netherlands cricketer Stephen Myburgh announced retirement from International cricket (Image Source: Google)
நெதர்லாந்தின் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீபன் மைபர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த மைபர்க் நெதர்லாந்து அணிக்காக 45 டி20 போட்டிகளிலும் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தற்போது 38 வயதாகும் ஸ்டிபன் மைபர்க், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரின் நேற்று நடந்த சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பை உடைத்தனர். இதன் மூலம் 2024 டி20 உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து அணி நேரடியாக தகுதி பெற்றது.
நேற்று நடந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்த மைபர்க் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் தான் ஸ்டீபன் மைபர்க் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.