
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் விக்ரம்ஜிட் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் விக்ரம்ஜிட் 27 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த முசா அஹ்மத் - காலின் அக்கர்மேன் இணை ஓரளவு தாக்குப்பிடித்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் முசா அஹ்மத் 29 ரன்களிலும், காலின் அக்கர்மேன் 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, வெஸ்லி பர்ரெஸி 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றளித்தார்.