பந்தை சேதப்படித்திய நெதர்லாந்து வீரருக்கு தடை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மா 4 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கத்தாரில் நடைபெற்று முடிந்தது.
மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நெதர்லாந்தை ஒயிட் வாஷ் செய்தது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியின் போது நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மா பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
மேலும் அவர் தனது நகத்தை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது கேமிராவில் பதிவாகியிருந்தது. கிரிக்கெட் போட்டிகளில் போது பந்தை சேதப்படுத்துவது ஐசிசியின் நடத்தை விதிகளின் படி குற்றமாகும்.
இதையடுத்து தனது குற்றத்தை ஒப்புகொண்ட கிங்மாவிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 4 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. மேற்கொண்ட அவர் எந்த விசாரணைக்கும் வரவேண்டியதில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now