Vivian kingma
CWCL 2: அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல் வெற்றி!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஓடவுட் மற்றும் விக்ரம்ஜித் சிங் இணை இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதத்தை நெருங்கிய மேக்ஸ் ஓடவுட் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்ரம்ஜித் சிங் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்ரம்ஜித் சிங்கும், 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெஸ்லி பரேஸியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் விளையாடிய நோஹா கிராஸ் 4 ரன்களிலும், ஷரிஸ் அஹ்மத் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Vivian kingma
-
முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து!
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியானது மழை காரணமாக டாஸ் வீசப்படாமல் கவிடப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பந்தை சேதப்படித்திய நெதர்லாந்து வீரருக்கு தடை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மா 4 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24