
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதா அறிவித்ததுடன் அமெரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த மேக்ஸ் ஓடவுட் - விக்ரம்ஜித் சிங் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை மலமளவென உயர்த்தினர். இதில் விக்ரம்ஜித் சிங் 14 ரன்களுக்கும், மேக்ஸ் ஓடவுட் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், ஸாக் லியான், ஆர்யன் தத், நோஹா கிராஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் ரியான் கெலின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 36 ரன்களைச் சேர்க்க, அவருக்கு துணையாக கைல் கெலின் 16 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் காரணமாக நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. அமெரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்மீத் சிங் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு கேப்டன் மொனாங்க் படேல் மற்றும் சைதேஜா முக்கமல்ல இணை அதிரடியாக தொடங்கினர். இதில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் மொனாங்க் படேல் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.