Advertisement
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan June 07, 2024 • 22:33 PM
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

 

Netherlands vs South Africa Dream11 Prediction Match 16, ICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். இத்தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே கடந்த முறை இவ்விரு அணிகளும் மோதிய உலகக்கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அத்தோல்வியின் மூலம் கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணியால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தொல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி இத்தொடரை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Trending


NED vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - நசாவ் கவுண்டி சர்வதேச மைதானம், நியூயார்க்
  • நேரம் - ஜூன் 08ஆம் தேதி, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

NED vs SA Pitch Report

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் குறித்த விமர்சனங்கள் மேலோங்கியுள்ளன. ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நிலையற்ற பவுன்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் இது பேட்டர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிட்சாக இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் நீளமானது என்பதால் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறி வருகின்றனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். 

NED vs SA T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 02
  • தென் ஆப்பிரிக்கா - 01
  • நெதர்லாந்து - 01
  • முடிவில்லை - 00

NED vs SA: Where to Watch?

கிராண்ட் ப்ரேரி மைதானமானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Netherlands vs South Africa Probable Playing XI

நெதர்லாந்து உத்தேச லெவன்: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜீத் சிங், சிப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், டிம் பிரிங்கிள், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், பால் வான் மீகெரென், விவியன் கிங்மா.

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே, ஒட்னியல் பார்ட்மேன்.

NED vs SA T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன் - ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேக்ஸ் ஓடவுட்
  • ஆல்-ரவுண்டர்கள் - பெஸ் டி லீட் (துணை கேப்டன்), ஐடன் மார்க்ரம், லோகன் வான் பீக், சைப்ரண்ட் இங்கல்பிரெக்ட்
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, பால் வான் மீகெரென், ஆன்ரிச் நோர்ட்ஜே (கேப்டன்)

NED vs SA Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match NED vs SA, NED vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, NED vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Netherlands vs South Africa

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement