
'Never Claimed That I Was A Vegan': Virat Kohli Asks Trollers To 'Take A Deep Breath' (Image Source: Google)
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளை இங்கிலாந்து செல்லவுள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் வீரர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே தனது மகளின் பெயருக்கான அர்த்தம் தனது மகளின் புகைப்படம் போன்றவற்றை குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த கோலி, தற்போது தனது உணவு முறை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.