
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதில் ஒரு அரை சதம் உட்பட 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், “வெஸ்ட் இண்டீஸில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியுடன் அழைத்துச் செல்லவும், திறனை மேலும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பையும் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு இடது கை வீரர், மிகவும் நம்பிக்கைக்குரியவராக திலக் வர்மா தெரிகிறார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
I want to do well and I'm pretty confident playing one day cricket.@TilakV9 describes his feelings after getting selected for #AsiaCup2023 - By @RajalArora #TeamIndia pic.twitter.com/79A85QGcug
— BCCI (@BCCI) August 22, 2023